Show all

முகநூலில் பார்வையற்றோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை...

முகநூலில் பார்வையற்றோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகநூல் தளத்தில் பார்வையிழந்த என்ஜீனியராக முதன்முதலாக பணிபுரியத் தொடங்கியுள்ள மேட்கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார். நண்பர்கள், குடும்பத்தினர் என தனக்கு விருப்பமான விஷயங்களைப் புகைப்படமாக முகநூலில் பகிர்வது வழக்கம்.

இந்தச் செயற்கை நுண்ணறிவு டூலின் மூலம் முகநூலில் வெளியிடப்படும் புகைப்படத்தில் உள்ள முக்கிய விவரங்களைப் பார்வையற்றோர் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தப் பிரத்யேக டூல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.