Show all

இந்தியா, போன்ற நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ள வேலை வாய்ப்புகளை மீட்டுத் தருவேன்

அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் அங்கு இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, டொனால்ட் டிரம்ப் வெளியிடும் கருத்துகள் அங்கு பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. முஸ்லிம்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவேன் என அவர் பிரசாரம் மேற்கொண்டது அவருக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில் தனது வெற்றி வாய்ப்பு பற்றி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது:

தெற்கு கரோலினா மாநில வெற்றிக்குப் பின், அதிபருக்கான வேட்பாளராக நான் அறிவிக்கப்படுவது உறுதி என நம்புகிறேன். எனது தலைமையை விரும்புவதாக ஆப்ரிக்க அமெரிக்கர்கள் தலைவர்கள் பலரும் கூறுகின்றனர். ஏனென்றால், இந்தியா, வியட்நாம், மெக்சிகோ, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ள நம் நாட்டு வேலை வாய்ப்புகளை மீட்டு உங்களுக்கே தருவேன் என நான் உறுதி அளித்து இருப்பதுதான். ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு பெரிய அளவில் நல்லது செய்ய உள்ளேன். இச்சமுதாயத்தினரில், 58விழுக்காடு வேலை இல்லாமல் உள்ளனர்.

 

வௌ;ளை இனத்தவர்களைக் காட்டிலும் அவர்களின் நிலைமை கவலைக்கு உரியதாக உள்ளது. ஹிலாரிக்கும் எனக்கும் நேரடி போட்டி ஏற்படுமானால், எனக்கு பெரும்பான்மை வெற்றி கிடைப்பது உறுதி. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். இவ்வாறு வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுமானால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.