Show all

இந்தியா, இலங்கையை இணைக்கும் பாலம் அமைக்கப்படாது: மைத்ரிபால சிறிசேனா

இந்தியா, இலங்கையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.24,000 கோடி மதிப்பில் கடல் பாலம், சுரங்கப் பாதை அமைக்க நடுவண் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பாலம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘பாலம் அமைக்கப்பட்டால் இந்தியாவுக்கு இலங்கை அடிமையாகிவிடும்’ என்று சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறினார். மற்றொரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில் பேசியபோது, பாலம் கட்டப்பட்டால் அதனை குண்டுவைத்து தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்தார். ‘இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்குப் பகுதி, இந்தியாவின் தமிழகம் ஆகியவையே பாலம் மூலம் இணைக்கப்படும். இந்தியர்கள் இடைவிடாது இலங்கைக்கு வருவார்கள். இதனால் சிங்களர்களுக்கு இருக்கும் ஒரே நாட்டையும் இழக்கும் நிலை ஏற்படும்’ என்று ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர். இத்தகைய எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்தியாவுடன் பாலம் அமைக்கப்படாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். கனேலந்தை விகாரையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கப்படுவதாக வெளி யான தகவலில் உண்மையில்லை. இதுதொடர்பாக இருநாட்டு அரசுகளும் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.