Show all

கடலில் மிதக்கும் மர்ம பொருட்கள் தொலைந்து போன விமானத்தின் பாகங்களா

கடந்த 22ம் தேதி காலை 8.30மணிக்கு சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு இந்திய விமானப்படையின் விமானம் சென்றது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது? இந்த நிலையில் அந்த விமானம் காற்று சுழற்சியின் காரணமாக விபத்தில் சிக்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் இருந்த 29 வீரர்களின் நிலை என்ன என்பது புதிராக உள்ளது. விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் கடந்த 15 நாட்களாக விமானம் குறித்து எந்த உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை. தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ‘சாகர்நிதி’, மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்திர ரத்னாகர்’ ஆகிய 2 ஆராய்ச்சிக் கப்பல்கள், ‘நிருபக்’ என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என 4 கப்பல்கள் மாயமான விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. சென்னையில் இருந்து கடலுக்குள் 270 கிமீ தொலைவில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் சுமார் 3. 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மர்ம பொருட்கள் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மர்ம பொருட்கள் மாயமான விமானத்தின் பாகமாக இருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது. மேலும் கடலில் மிதக்கும் பாகங்களை ஆய்வு செய்த பின்னரே அது தொலைந்து போன விமானத்தின் பாகங்களா என்று முடிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.