Show all

உலகின் 10பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடமாம்

உலகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. NEW WORLD WEALTH என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு நாடுகளிலும் தனிநபரின் சொத்து மதிப்பை சராசரியாகக் கொண்டு ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த முடிவுகளின்படி உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் மொத்த தனிநபர் மதிப்பு 48 ஆயிரத்து 900 பில்லியன் டாலராக உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவில் தனி நபர் மதிப்பு 17 ஆயிரத்து 400 பில்லியனாகவும், மூன்றாவது இடத்தில் உள்ள ஜப்பானில் தனிநபர் மதிப்பு 15 ஆயிரத்து 100 பில்லியனாகவும் உள்ளதாக அந்த முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பணக்கார நாடுகளில் 7-வது இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவில் தனிநபரின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருப்பதன் காரணமாக பண மதிப்பு மிகையாக இருப்பதாகவும் அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.