Show all

பெரும் தீயாகி வருகிறது இணையத்தில்! திருமணமாகி 3வது நிமிடத்தில் மனைவி, கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்ட சம்பவம்

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குவைத்தில் அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் திருமணமாகி 3வது நிமிடத்தில் மனைவி, கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் தீயாகி வருகிறது இணையத்தில். திருமண நிகழ்வில் கணவன் மனைவியை முட்டாள் என கூறியதாக ஆத்திரமடைந்த மனைவி கணவனிடம் விவாகரத்து கேட்டதாக கூறப்படுகிறது.

குவைத்தில் அண்மையில் ஒரு இணையருக்கு திருமணமானது. இவர்கள் திருமண சடங்குள் நிகழ்ந்து இவர்கள் இருவரும் அனைவரது முன்னிலையிலும் கணவன் மனைவியாகி 3வது நிமிடத்தில் கணவன் ஒரு கட்டத்தில் மனைவியை பார்த்து 'முட்டாள்;' என்பதான என கூறினார். இதை கேட்டதும் மனைவி கோபமடைந்துவிட்டார். உடனடியாக கணவனுடன் சண்டையிட்டு அவரை விட்டு பிரிந்து செல்வதாக முடிவு செய்தார். தற்போது இவர்களின் விவாகரத்து அறங்கூற்றுமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

குவைத் என்றால் அரபி மொழியில் இந்த விவாதம் நடந்திருக்கக் கூடும். அரபி மொழியில் முட்டாள் என்பதற்கு என்ன அடிப்படை வைத்திருக்கிறார்கள் நமக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழில் முட்டாள் என்பதற்கு அறிவே இல்லாதவர் என்று பொருள் அல்ல. சிந்திக்க மறுப்பவர் அல்லது சிந்திக்கத் தேவையில்லாதவர் என்றே பொருள். முட்டு மரம், முட்டுக்கட்டை போன்ற அடிப்படை உடையதே முட்டு ஆள் என்ற சொல். 

முட்டுமரம் என்றால் வீடு கட்டுவதற்கு முன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு முன்;பு அமைக்கிற சென்ட்ரிங் என்கிற பொய்க்கூரை அமைப்பிற்கு தாங்கலாக கொடுக்கிற மரங்களுக்குப் பெயர்தான் முட்டு மரம். 

தேர் இழுத்துச் செல்லும் போது அதை நிறுத்துவதற்கு ஒரு பெரிய வலுவான கட்டையைப் பயன் படுத்துவார்கள் அந்தக் கட்டைக்குப் பெயர்தான் முட்டுக்கட்டை. 

ஆக தனக்கு என்று ஒரு சிந்தனையில்லாமல் மற்றவர்களுக்காக நிற்பவர்களைத்தான் தமிழ் முட்டாள் என்கிறது. 

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால், இந்திய நாட்டிற்காக ஒரு ஆணியும் பிடுங்காத, தமிழகத்திற்கு நீட், ஹைட்ரோ கார்பன் என்று தீங்குகளே செய்து வருகிற மோடிக்கு ஆதரவாக தமிழகத்தில் நிற்கிற தமிழிசை, எச்இராஜா போன்றவர்களைத்தான் தமிழ் முட்டாள் என்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,061.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.