Show all

சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில்

இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் கைது செய்யப்படுவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதனை ஏற்றுகொண்டுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சட்டரீயாக 89 துப்பாகிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.

இதற்கிடையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசாரணை ஆணைகுழுவில் ஆஜராகினார் என அதன் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோத்தபாய கைது செய்யப்படலாம்?

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு சட்டவிதி முறைகளுக்கு மாறாக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில், இது சம்பந்தமான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதூரமான மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு சட்டவிதிகளுக்கு மாறாக துப்பாக்கிகள் வழங்கப்பட்டமை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் 89 துப்பாக்கிகளே சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையானார்.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களைக் கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கோத்தபாய ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம், பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் ஆணைக்குழுவின் முன் ஆஜராகியதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பான முறைப்பாடு சம்பந்தமாக இன்றைய தினம் மேலும் 7 பேர் ஆணைக்குழுவின் ஆஜராகியுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.