Show all

அமெரிக்காவில் அதிக அளவில் பேசப்படும் இந்திய மொழியாக, இந்தி, உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவில் அதிக அளவில் பேசப்படும் இந்திய மொழியாக, இந்தி, உருவெடுத்துள்ளது. அங்கு வசிக்கும் 6.5 லட்சம் பேர், இந்தி பேசுகின்றனர்.

அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம், 2009-13ல் எடுத்த கணக்கெடுப்பில், அங்கு வசிப்பவர்கள் பேசும் மொழிகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில், ஆறு கோடி பேர், தங்கள் வீடுகளில், ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளைப் பேசுபவர்களாக உள்ளனர்.

அதிகபட்சமாக, மூன்று கோடி பேர், ஸ்பானிஷ் மொழி பேசுகின்றனர். சீன மொழியை, 30 லட்சம் பேர் பேசுகின்றனர்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில், அதிகபட்சமாக, 6.5 லட்சம் பேர், இந்தி பேசுகின்றனர். இதன்மூலம், அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழியாக, இந்தி உருவெடுத்துள்ளது. பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு மொழிகளை, 2.5 லட்சம் பேர் பேசுகின்றனர்.

இரண்டு லட்சம் பேர், தமிழ் பேசுகின்றனர்.

மலையாளம் பேசுவோர் எண்ணிக்கை, 1.5 லட்சமாகவும், கன்னடம் பேசுவோர் எண்ணிக்கை, 50,000 ஆகவும் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.