Show all

சாம்நாத்தை பிரிந்த லிபிகா டெல்லி போலீசில் சோம்நாத் மீது புகார்.

டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பாரதி.

இவருக்கும் லிபிகா மித்ரா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு சோம்நாத்துக்கும் லிபிகா மித்ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சோம்நாத்தை பிரிந்த லிபிகா டெல்லி போலீசில் சோம்நாத் மீது புகார் தெரிவித்தார். அவர் தனது புகார் மனுவில், சோம்நாத் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கொலை செய்ய முயன்றதாகவும் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சோம்நாத் பாரதிக்கு போலீசார் சம்மன் அனுப்பியும் அவர் காவல்நிலையத்திற்கு வரவில்லை. அதேசமயம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு சோம்நாத் மனு செய்தார். நேற்று அந்த மனு தள்ளுபடியானது.

இதைத் தொடர்ந்து சோம்நாத்தை ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவில் கைது செய்ய டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சோம்நாத்தை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், நீதிமன்றம் தீர்மானித்துள்ள தேதிவரை அதாவது, வியாழக்கிழமை வரை அவர் கைது செய்யப்படமாட்டார் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, முன்ஜாமின் வழங்கக்கோரி சோம்நாத் டெல்லி உயர்நீதிமன்றத்தை இன்று அணுகியுள்ளார். அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் இந்த மனுவை தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.