Show all

இம்ரான்கான் உள்நோக்கமா! இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தொடங்குவோம்

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற இம்ரான் கான், 'இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறேன். இருநாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வேன்' என்றார். இதையடுத்து, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதை இந்தியா நிராகரித்துவிட்டது. இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு, இம்ரான்கான் நீண்ட பேட்டியளித்துள்ளார். அதில், இந்தியா - பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக முயற்சி செய்து வருகிறேன். ஆனால், இந்தியா அதைப் புறந்தள்ளுகிறது. இந்தியாவை இப்போது ஆளும் அரசு, பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணுகுமுறை கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் முடிந்ததும், மீண்டும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தொடங்குவோம் என்று கூறியுள்ளார். 

இம்ரான்கான் இந்தியாவில் புதிய அரசு அமையும் என்று எதிர்நோக்குகிறாரா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,995.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.