Show all

ரணிலை தலைமைஅமைச்சர் ஆக்க மாட்டேன்! ராஜபக்சே- பித்தத்திற்கும், புலம்பலுக்கும் ஆளாக்கப் பட்டிருக்கிற மைத்ரிபால சிறிசேன

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்டை நாடான இலங்கையில், அரசியல் குழப்பம் தீரவில்லை என்பதை விட தீருவதற்கான வழியே இல்லை என்பதே உண்மை. 

ராஜபக்சே! ராஜபக்சே! ராஜபக்சே! என்று ஓயாமல் புலம்பும் பித்தத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார் மைத்ரிபால சிறிசேன. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் தலைமை அமைச்சராக்க மாட்டேன். அவரை பாரளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என, அவரது கட்சியினருக்கு கூறியுள்ளேன், என, அதிபர், மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். 

ரணில் விக்கிரமசிங்கேவை நூறு விழுக்காடும் இலங்கை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மந்திரித்து விடப் பட்டிருக்கிறார் மைத்ரிபால சிறிசேன.

மைத்ரிபால சிறிசேனவுக்கு மருத்துவ கலந்தாய்வு தேவைப்படுகிறது. அவருக்கு மருத்துவ கலந்தாய்வு தரவேண்டும் அல்லது மனநிலை பாதிக்கப் பட்டிருப்பதால், அவருக்கு அரசியலில் இருந்து முழு நேர ஓய்வு தரவேண்டும். இரண்டில் ஒன்ற நடவாமல், இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வர வழியே இல்லை. 

பூனைக்கு யார் மணி கட்டுவது? அந்த நாட்டின் அறங்கூற்று மன்றத்தால் முடியும். அமெரிக்காவால் முடியும், ஆனால் சீனாவைத் தாண்டி முயல வேண்டும். இந்தியாவால் மிகமிக எளிதாக முடியும், பங்களா தேசத்தில் இந்திரா அவர்கள் அறுவை சிகிச்சை நடத்தியது போல. ஆனால் பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என்கிற மோடியால் சாத்தியப் படாதே. பலிகாரனிடம் பஞ்சாங்கம் கேட்டால் அர்த்த ராத்திரியில் மரணமாகவல்லவா போய்விடும். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,983.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.