Show all

மேல்சாதியினருக்கான பத்து விழுக்காடு அதிகார ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு! இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை அம்சத்தை மீறுவதாக

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தங்களை மேல் சாதியினர் என்று பீற்றிக் கொள்கிறவர்களின் அதிகாரத்தால், பெரும்பான்மை மக்கள் அடிமைகளாக நடத்தப் பட்டு வந்தனர். 

வெள்ளையர்கள் ஆட்சியில் மீட்புணர்வு அடைந்த பெரும்பான்மை மக்கள், விடுதலை பெற்ற இந்தியாவில் சட்ட ரீதியான இடஒதுக்கீட்டைப் பெற்று கொஞ்சமாக பலனடைந்து வருகின்றனர். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல்சாதியினர், பெரும்பான்மை மக்களைப் பாகுபடுத்தி தாழ்த்த வகையில்லாத நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மை மக்களோடு உடன்பட்டு போய்க் கொண்டிருக்கும் நிலையில், 

நடைமுறையில் இருக்கிற இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஆதிக்க சாதிகளுக்கு பத்து விழுக்காடு அதிகார ஒதுக்கீடு செய்ய பாஜக மாய்மால அரசியலில் ஈடுபட்டுள்ளது. 

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பெரும் பான்மை மக்களின் கழுத்தை அறுப்பதையே சாதனை என்று பீற்றி வரும் நிலையில் அடுத்த கட்ட சாதனையாக மேல்தட்டு மக்களுக்கான இந்த பத்து விழுக்காடு அதிகார ஒதுக்கீடு அமைகிறது.

இந்தியாவில் கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில். புதிதாகப் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கு 10விழுக்காடு அதிகார ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்து, மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சார்ந்த தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பத்து மணி நேரத்துக்கும் அதிகமான விவாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 165 வாக்குகள் ஆதரவாகப் பெற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த அதிகார ஒதுக்கீட்டு மசோதாவை பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் இந்தப் பொருளாதார ரீதியான அதிகார ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பும், கவுஷல் காந்த் மிஷ்ரா என்பவரும் பொதுப் பிரிவினருக்கு  பொருளாதார அடிப்படையிலான 10 விழுக்காடு அதிகார ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து உச்சஅறங்கூற்று மன்றத்தில்  மனு பதிகை செய்துள்ளனர். அந்த மனுவில் இடஒதுக்கீட்டுக்கு பொருளாதாரம் என்பதை அளவுகோலாக வைக்க முடியாது என்றும். இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை அம்சத்தை மீறுகின்றது. எனவே இதை ரத்து செய்யக் கோரி மனு பதிகை செய்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.