Show all

ஹிந்தி வெறிபிடித்த இந்தியக் குடியுரிமை அதிகாரி! ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா? அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் அதிகாரியின் இந்த அடாவடி செயல் குறித்து தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்டோருக்கு கீச்சுவில் புகார் கூறியுள்ளார். 

மாணவரிடம் திமிராகப் பேசி அவமரியாதை செய்த அந்த அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த அவரது பெயர் ஆப்ரகாம் சாமுவேல். முனைவர் பட்ட ஆய்வு மாணவர். இன்று அதிகாலை 1 மணியளவில் நியூயார்க் செல்வதற்காக விமானத்தைப் பிடிக்க மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார் சாமுவேல். அங்கு குடியுரிமைப் பிரிவில் வழக்கமான நடைமுறைகளுக்காக அணுகியபோது அங்கிருந்த அதிகாரி ஹிந்தியில் பேசியுள்ளார். தனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்று கூறி ஆங்கிலத்தில் பேசியுள்ளார் சாமுவேல். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்த அதிகாரி ஹிந்தியிலேயே பேசியுள்ளார். சாமுவேல் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தபோது இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா. அப்படின்னா தமிழ்நாட்டுக்கே போயிரு என்று கூறி குடியேற்ற நடைமுறையை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர் சாமுவேல் குடியுரிமைப் பிரிவு உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதையடுத்து விரைந்து வந்த உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரியை கேட்டபோது அவர்களிடமும் ஹிந்தி தெரியாவிட்டால் தமிழ்நாட்டுக்குப் போகுமாறு திரும்பவும் திமிராக பேசியுள்ளார் அந்த அதிகாரி. 

இதையடுத்து உயர் அதிகாரிகள் சாமுவேலுக்கு வேறு அதிகாரி மூலம் வழக்கமான நடைமுறைகளை முடித்துக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

சாமுவேல் உடனடியாக விமானத்தை பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் பிரச்சினை செய்யாமல், புகார் ஏதும் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். ஆனால் கீச்சுவில் பதிவிட்டதால் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் அந்த ஹிந்தி வெறி பிடித்த அதிகாரியைக் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.