Show all

அயல்கோள் மனிதர்களின் கண்டுபிடிப்பாம்! நமக்குத் தெரிந்த எந்தப் பறக்கும் சாதனத்தை விட அதிவேக பறக்கும் தட்டு. பார்த்தவர்கள் விமானிகள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அயல் கோள்களில் மனிதன் வசிக்கலாம் என்றும் அவர்கள் புவி மனிதர்களை விட அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞான உலகம் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக இது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளிப்பட்டுக்;; கொண்டிருக்கிறது.

இதனால் உலகம் முழுக்க, அந்த வேற்றுக்கோள் மனிதர்களை  ஏலியன்கள் என்று அழைக்கவும், ஏலியன்களுக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் தொடங்கி விட்டார்கள். அதே சமயம் இதெல்லாம் கட்டுக்கதை என்று மறுப்பவர்களும் உள்ளனர். 

இந்த நிலையில்தான் நான்கு விமானிகள் அயர்லாந்து அருகே பறந்து கொண்டு இருந்த போது இரண்டு பறக்கும்தட்டுக்களைப் பார்த்ததாக கூறியுள்ளனர். அந்த நேரத்தில் அந்த பகுதியில் வானத்தில் நான்கு விமானங்கள் பறந்து இருக்கிறது. இந்த நான்கு விமானத்தை சேர்ந்த விமானிகளும், அந்தப் பறக்கும் தட்டைப் பார்த்ததாக வாக்குமூலம் அளித்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மிகவும் வேகமாக சென்றதாக கூறியுள்ளனர். மேலும் இதன் வெளிச்சம் மிக மிக அதிகமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர். மூன்று விமானிகள், இரண்டு பறக்கும் தட்டுக்களைப் பார்த்ததாக கூறியுள்ளனர். ஒரு விமானி, நான் ஓட்டிய விமானத்திற்கு அருகே மெதுவாக வந்துவிட்டு பின் வேகமாக பறந்துவிட்டது என்றுள்ளார். 

இதற்காக சில ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். விமானத்தின் உள்ளே இருக்கும் கருப்பு பெட்டியின் கேளொலி பதிவு செய்யும் கருவியில் இதற்கான ஆதாரம் உள்ளது என்கிறார்கள். அந்த பறக்கும் தட்டு அந்த விமானம் அருகே சென்ற போது பெரிய அளவில் சத்தம் எழுப்பியுள்ளது. இந்த வித்தியாசமான சத்தம் அந்தக் கருவியில் பதிவாகி உள்ளதாகவும், அதை ஆதாரமாக காட்ட போவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை இப்படி ஒரு சாதனத்தை தங்கள் வாழ்நாளில் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்தப் பறக்கும் தட்டு பல மடங்கு வேகத்தில் சென்றுள்ளது. மனிதர்கள் கண்டுபிடித்த எந்த பறக்கும் சாதனம் செல்லும் வேகத்தை விடவும் இது அதிக வேகத்தில் சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,971.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.