Show all

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக நாணய புழக்கம்.

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக நாணய புழக்கம். அதும் தங்கக் காசுகளை தயாரித்து உபயோகிக்கவுள்ளனர். இது தொடர்பான விபரம் அவர்கள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றின் மூலம் உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், உலகையே அச்சுறுத்தி வருகிறது.  உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அந்த தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால் வேகமாக பலம் பெற்று வரும் அந்த தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அந்த வீடியோவிற்கு தி ரைஸ் ஆப் தி கிலாபா அண்ட் ரிடர்ன் ஆப் தி கோல்ட் தினார் எனப் பெயரிடப் பட்டிருந்தது. அதில், தங்களது தீவிரவாத இயக்கத்திற்கென பிரத்யேகமாக தங்கக் காசுகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்தத் தங்கக் காசுகள் தயாரிக்கும் திட்டத்திற்குப் பின்னணியில் ஆழமான பொருள் ஒன்று பதிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது காகிதப் பணம் மூலம் நிர்வாகம் செய்யப்படும் முதலாளித்துவ நிதிய அமைப்புகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

இது, காகிதப் பணத் தயாரிப்பை கண்காணித்து வரும் அமெரிக்காவிற்கு மிகப் பெரும் அடியாக இருக்கும் என கூறப்படுகிறது. காகிதப் பணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகவே இந்த உலோக நாணயங்கள் தயாரிப்பை தொடங்கியிருப்பதாக தீவிரவாதிகள் தங்களது வீடியோ மூலம் உலகத்திற்கு தெரியப் படுத்தியுள்ளனர்.இந்த உலோக நாணயங்களை தீவிரவாதிகள் சந்தையில் புழக்கத்தில் விடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.  தீவிரவாதிகள் தயாரித்து வரும் இந்த புதிய உலோக நாணயங்கள் தங்கத்தினால் மட்டுமின்றி வௌ;ளி, காப்பரிலும் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் ஒரு பக்கத்தில் இஸ்லாமிய சின்னங்கள் பதியப்பட்டுள்ளன. மற்றொரு பக்கத்தில் ஏழு கோதுமைக் கட்டுகள் படம் பதியப்பட்டுள்ளது. இன்னும் சில நாணயங்களில் உலக நாடுகளின் வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. அவை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்ய திட்டமிட்டுள்ள பகுதிகள் என அவர்கள் கூறுகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.