Show all

சீனாவாக இருந்தால் என்ன? சுந்தர்பிச்சை திட்டவட்டம்! கூகுள் ஒரு போதும் மனித உரிமைக்கு எதிரான செயலாக்கத்திற்கு ஒத்துப் போகாது

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவுக்கென்று தனியாக கூகுள் தேடு பொறியை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தமிழ்த்திரு.சுந்தர்பிச்சை  தெரிவித்துள்ளார்.

சீனாவில் இணையத் தேடு பொறிகள்  செயல்படுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. சீன அரசின் தணிக்கைக்குப் பிறகே தேடுபொறிகள் செயல்பட முடியும். சீன மக்கள் எதைத் தேடுகிறார்கள், அவர்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று சீன அரசே முடிவு செய்யும். 

இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற அளவில் மட்டுமல்லாமல் கூகுள் ஊழியர்களிடமும் எதிர்ப்பு இருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் சீனாவிலிருந்து வெளியேறியது. ஜனநாயக மதிப்புகளைக் காத்ததற்கும், லாப நோக்கத்தில் செயல்படவில்லை என்பதற்காகவும் கூகுள் நிறுவனம் பெரும் பாராட்டையும், புகழையும் இந்தத் துணிச்சலுக்காகப் பெற்றது. 

இந்த நிலையில், சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரம் செய்துகொள்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விசாரணைக்குக் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேரில் அணியமாகி விளக்கமளித்தார்:

சீனாவில் கூகுள் தேடு பொறியை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. சீனாவுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம். அனைவரும் அனைத்துத் தகவல்களையும் பெற வேண்டும். இது அனைவருக்குமான மனித உரிமை. இந்தக் கொள்கையில் எந்த மாற்றமுமில்லை என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,000.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.