Show all

முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. சிவசேனா தனது ‘சாம்னா’ இதழில்:

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை மறந்துவிட முடியாது என சிவசேனா தனது ‘சாம்னா’ இதழில் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் பிரபலமானவர் என்றாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அடிக்கல்லை நட்டியவர்கள் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் என்பதை நாம் மறந்துவிட முடியாது. மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் கதவுகளைத் திறந்துவிட்டவர்கள் இவர்கள். அவர்களது பங்களிப்பை நாம் எப்படி மறக்க முடியும்.

இந்த இரண்டு முன்னாள் பிரதமர்களும் நாட்டின் பொருளாதாரத்தை மோசமான சூழ்நிலையிலும் கூட சரியான பாதையில் கொண்டு செல்ல திசையைக் காட்டியவர்கள். எங்களது சிந்தனையில் இருந்து மன்மோகன் சிங் வேறுபட்டவராக இருந்தாலும் அவர் நாட்டுக்கு சிறந்ததையே செய்தார் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் தான் தூர்தர்ஷன் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் புரட்சி நிகழ்ந்தது. அதற்கு பிறகு, ராஜீவ் காந்தி காலத்தில் கம்ப்யூட்டர் புரட்சி ஏற்பட்டது. அந்நேரத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் டெலிபோன் பூத்கள் இருந்தன.

இவ்வாறு சாம்னா இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.