Show all

புவி வெப்பமயமாதல் ஆபத்தானது! வெப்ப நடவடிக்கைகளைக் குறைத்து புவியைக் காக்க வேண்டி பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு போராட்டம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் வாழும் புவியை வேகமாக சூடடையச் செய்யும் முறைகேட்டில் உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பற்று ஈடுபட்டு வருகின்றன.

அவைகள் முறையே 1.காடுகள் அழித்தல் 2.மலைகளை அழித்தல் 3.ஏராளமாக மணல் அள்ளி ஆறுகளை அழித்தல் 4.பாதுகாப்பு இல்லாமல் தொழிற்சாலை புகையை வெளியேற்றுதல் 5.எரிபொருள் வாகனங்களை அதிகப் படுத்திக் கொண்டே போதல் 6.பெரும் பெரும் சாலைகளை அமைத்தல் இப்படி பற்பல வகையாக இயற்கையின் மீது செயற்கையை ஏற்றி புவியை வெப்பமாக்கி வருகின்றன.

அதையொட்டி பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதில் நாம் தோல்வியடைந்துள்ளோம் என 16 அகவையுள்ள பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க் ஒரு மாநாட்டில் பேசியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று ஒருநாள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், தங்கள் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு கிழமை தோறும் இதற்காகப் போராட்டம் நடத்தி வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,093.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.