Show all

அமெரிக்காவில் விஜய்யின் சர்கார் படம் இன்று வெளியாகிறது.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் அமெரிக்காவில் இன்று வெளியிப்படுகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நாளை தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் 'சர்கார்'. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் கதை திருட்டு தொடர்பாக வந்துள்ள சர்ச்சைகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சர்கார் திரைப்படமானது நர்மதா டிராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் அமெரிக்க நிறுவனம் கைகோர்த்து அமெரிக்காவில் படத்தை திரையிட மும்முரமாக உள்ளனர். தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அமெரிக்காவில் மட்டும் இன்றே காட்சிகள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,962.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.