Show all

இன்று இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படப் போவதில்லை! இன்னும் ஒன்பது நாட்கள், ராஜபக்சேவின் குதிரைப் பேரத்திற்கு அவகாசம்

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தை இருபது நாட்களுக்கு முடக்கி வைப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்து பத்து நாட்கள் கடந்த நிலையில், இன்று பாராளுமன்றம் கூடலாம் என்று எதிர்பார்க்;கப் பட்டது. 
ஆனால் இன்று பாராளுமன்றத்தை கூட்டாமல், அதிபர் தான் அறிவித்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக பாராளுமன்றம் கூட்டப் படவிருப்பதாக அறிவத்திருக்கிறார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக 100 உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 103 உறுப்பினர்களும் உள்ளனர். மீதமுள்ள 22 உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் உள்ளனர். இலங்கை தமிழர்கள் மீது போர் நடத்திய காரணத்திற்காக ராஜபக்சேவுக்கு எதிராக தாங்கள் வாக்களிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுபவரே பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் வேறு வழியின்றி ராஜபக்சே பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சிலருக்கு பணம் கொடுக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற ராஜபக்சே முதன்மை முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட உள்நாட்டு போரின் போது அப்பாவி தமிழர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதற்கு தோதாக, இன்று கூட்டப் படுவதாக இருந்த பாராளுமன்றம் இன்னும் ஒன்பது நாட்கள் கழித்தே கூட்டப் படவிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,962

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.