Show all

உலகின் மிகப் பெரிய புத்தகம்.

அரியானா மாநிலத்தில், 96 மணி நேரத்தில், உலகின் மிகப் பெரிய புத்தகம் உருவாக்கப்பட்டு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது.அரியானா மாநிலத்தில், மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, பரீதாபாத்தில், சமண மதத்தைச் சேர்ந்த, புரட்சிகர துறவி முனிஸ்ரீ தருண் சாகரின், சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம், 2,000 கிலோ எடையில், 33 அடி உயரம், 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. 96 மணி நேரத்தில், புத்தகத்தை உருவாக்கும் பணியில், 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.

வரும், ஞாயிறன்று நடைபெறும் விழாவில், 20 அங்குல உயரம் மற்றும் நான்கு கிலோ எடை கொண்ட, உலகின் மிகவும் சிறிய பெண்ணான, நாக்பூரைச் சேர்ந்த, ஜோதி ஆம்கே, இந்தபபபபப் புத்தகத்தை வெளியிடுகிறார். 'கின்னஸ்” உலக சாதனைப் புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக, நிபுணர்கள் குழுவினர் கலந்து கொள்கின்றனர்.

தீபாவளி வரை, இந்த புத்தகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.