Show all

சரிந்து வரும் புதினின் 'இமேஜ்” தூக்கி நிறுத்த, ஜிம்மில் உடற்பயிற்சி.

ரஷ்யாவில் சமீபகாலமாக அதிபர் புதினின் 'இமேஜ்” சரிந்து வருகிறது. இதை தூக்கி நிறுத்த, 'ஜிம்”மில் ஏகப்பட்ட உடற்பயிற்சி செய்து, அந்த போட்டோக்களை அந்நாட்டு அரசே வெளியிட்டுள்ளது.

புதின் எப்போதுமே தன்னை ஒரு ஹாலிவுட் ஹீரோவைப் போல் நினைத்துக்கொள்பவர். சட்டை அணியாமல் குதிரையில் விரட்டுவார்; சூப்பர்சானிக் விமானத்தை ஓட்டுவார்; புலி வேட்டையாடுவார் இத்யாதி. இந்த படங்கள் வெளியிடப்பட்டு, மக்களிடம் பரபரப்பாக பேசப்படும். இப்படியெல்லாம் 'ஸ்டன்ட்” செய்வதில் கில்லாடி அவர்.

செல்வாக்கு சர்...ர்..ர்...: இதற்கிடையே சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி அவரது செல்வாக்கு சரிந்து வருவது தெரிந்தது. இதைப் பார்த்த புதின், 'என்னடா செய்யலாம்” என யோசித்துப் பார்த்திருப்பார் போல. உடனே 'ஜிம்”முக்கு சென்றார். அதுவும் தனியாக செல்லாமல், 'தானுண்டு தன் வேலையுண்டு” என இருந்த பிரதமர் திமித்ரி மெத்வதேவையும் உடன் அழைத்துச் சென்றார்.

அங்கு தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்து, அந்த போட்டோக்களையும் வெளியிட வைத்தார். இதைப் பார்த்த ரஷ்யர்கள், தங்கள் அதிபர் எவ்வளவு கட்டுடலுடன் கவர்ச்சியாக இருக்கிறார் என ஆனந்தப்படுகிறார்களாம். ஆனால், இந்த படங்கள் எந்த அளவுக்கு அவரது இமேஜை உயர்த்தும் என தெரியவில்லை.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.