Show all

வேற்று கிரகங்களில் வாழ்பவர்கள் பூமியில் வாழும் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி...

வேற்று கிரகத்தை சேர்ந்தவர்கள் பறக்கும் தட்டு போன்ற கலங்கள் மூலம் பூமிக்கு வந்து செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.

ஆனால் அவர்களை இதுவரை நேரில் பார்த்தது இல்லை. எனவே, அவர்கள் குறித்த ஆராய்ச்சியில் பல நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வேற்று கிரக வாசிகள் குறித்து அமெரிக்காவின் எஸ்இஐடி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானி டாக்டர் நதாலி கேப்ரோல் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அவர்கள் குறித்து அவர் கூறும்போது, வேற்று கிரகங்களில் வாழ்பவர்கள் பூமியில் வாழும் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, வேற்று கிரகவாசிகளிடம் இருந்து சிக்னல்களை பெற எதிர்காலத்தில் வரக்கூடிய நவீன தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லை. அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள எத்தகைய தொழில் நுட்பங்கள் அல்லது செயல் முறைகளை பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கு தெரியாது. இயற்கை நிகழ்வுகளை அறிய விஞ்ஞானிகளின் ரேடியோ சிக்னல்களை பதிவு செய்துள்ளனர்.

விரைவு ரேடியோ வெடிப்புகள் என அழைக்கப்படும் இந்த சிக்னல்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வருகிறது. இவை லட்சக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து தொடர்ந்து பூமிக்கு வருகின்றன. இத்தகைய சிக்னல்கள் அறியப்படாத நட்சத்திரங்கள் மற்றும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து வரலாம். இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை வாழ்க்கை ஆதாரங்களை நாம் கண்டறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.