Show all

இங்கிலாந்து நாட்டில் தலைக்கவசம் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு.

இங்கிலாந்து நாட்டில் 1989-ம் ஆண்டு முதல், கட்டுமான தொழிலில் மட்டும் தலைக்கவசம் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மற்ற துறைகளில் இந்த விலக்கு வழங்கப்படவில்லை.

மாறாக பிற துறைகளில் ; தலைக்கவசத்திற்குப் பதிலாக மதச்சின்னமான தலைப்பாகை அணிந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. பணியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் அவர்களது கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டு விட்டது. இதற்கு தேவையான சட்ட திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

இதன் காரணமாக பணி இடங்களில் தலைப்பாகை அணிவதற்கு தடை இல்லை. சீக்கியர்களுக்கு பெரும்பாலான துறைகளில் ; தலைக்கவசம்; அணிவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள சீக்கிய கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் குரிந்தர் சிங் ஜோசன் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் வேண்டுகோளுக்கு பாராளுமன்றம் செவிசாய்த்து இருக்கிறது. சட்டத்தில் மாற்றம் செய்திருக்கிறது” என கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.