Show all

விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து விமானத்தை ஒரு பெண் தரை இறக்கினார்.

நடுவானில் விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து நடுவானில் பறந்த விமானத்தை ஒரு பெண் தரை இறக்கினார்.

ஸ்பெயின் நாட்டில் செவிலே பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தை அவரது கணவரே ஓட்டினார்.

விமானம் நடுவானில் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது அவரது கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

இதனால் விமானம் தள்ளாடி நிலைதடுமாறியது. அதைப் பார்த்த அப்பெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதை தொடர்ந்து அவர் விமான தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்த போக்குவரத்து கண்ட்ரோலரை தொடர்பு கொண்டார்.

அவரிடம் தனது நிலையை விளக்கினார். உடனே அவர் விமானத்தை நீங்களே இறக்குங்கள் என்றார். ஆனால் அப்பெண்ணுக்கு விமானம் ஓட்ட தெரியாது. இதற்கு முன்பு அதை இயக்கிய அனுபவம் இல்லை.

இருந்தாலும் தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்ட்ரோலர் சொல்லிக் கொடுத்தபடியே விமானத்தை ஓட்டினார். சுமார் 90 நிமிட பயணத்துக்கு பின் ஒரு வழியாக செவிலே விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆரஞ்சு தோப்பிற்குள் தரையிறங்கியது.

தரையில் மோதியபடி தரையிறங்கியதால் விமானம் கடுமையாக சேதம் அடைந்தது. அதில் அப்பெண் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே விமானத்தில் மயங்கி கிடந்த அப்பெண்ணின் கணவர் அதாவது விமானி மரணம் அடைந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.