Show all

பூமியைப் போன்ற உலகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூமியைப் போன்ற ஒரு உலகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியைப் போன்று மனிதர்கள் வாழ ஏற்ற சூழலில் ‘உல்ஃப் 1061’ என்ற புதிய கோள் பூமியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒளியாண்டு என்பது ஒராண்டு ஒளி பயணிக்கும் தூரம் அதாவது (10லட்சம் கிமீ) ஆகும். மனிதர்கள் வசிப்பதற்குத் தகுதியான கோள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், பூமியைப் போன்று 3 கோள்கள்; கண்டுபிடிக்கப்பட்டன. இம்மூன்று கோள்களும் ஒரு சிறு நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன.

இந்த நட்சத்திரத்திற்கு உல்ஃப் என்று பெயர்  சூட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று கோள்களின் நிலப்பரப்பும் பாறையைப் போல் கடினமாக உள்ளது. இது பூமியை விட 4 மடங்கு பெரியதாக. மேலும் இங்கு தண்ணீர் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.