Show all

தினத்தந்தி இலங்கை பதிப்பு! இலங்கையின் பாரம்பரியத் தமிழ்க்குடிகளை, இந்தியத்தனமான தமிழர்களாக வென்றெடுக்க, நல்லதொரு தளம்

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினத்தந்தி நாளேடு ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வெளியாகிறது.

தினத்தந்தி'யின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தொடங்கப்பட்டது. அங்குள்ள தமிழர்களின் பேராதரவை பெற்ற 'தினத்தந்தி', தனது 2-வது சர்வதேச பதிப்பை இலங்கையில் வெளியிடுகிறது. இது 'தினத்தந்தி'யின் 18-வது பதிப்பு ஆகும். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் ஆவார்கள். அவர்கள் கோரிய தனித்தமிழீழம்: 

உலக நாடுகளின் ஒத்துழைப்போடும், இந்திய தமிழ் விரோத சக்திகளான நடுவண் காங்கிரஸ், பாஜக அரசுகள் மற்றும் இந்திய தமிழ் விரோத சக்திகளான அதிகாரிகளின், வேதியியல் ஆயுதங்களோடும் நான்காவது ஈழப்போரில் முடித்து வைக்கப் பட்டது.  

தற்போது இந்தியத் தனமாக இலங்கை அரசிலும் தமிழர்கள் இடம் பெற்று உள்ளனர். அங்கு தொழில், வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான உறவு நிலவுகிறது. 

இந்த நிலையில், தினத்தந்தி தனது புதிய பதிப்பை இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வெளியிடுகிறது. இலங்கையில் அதிசிறந்த ஊடக சேவையாற்றி வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான 'வீரகேசரி' தமிழ் நாளிதழுடன் இணைந்து 'தினத்தந்தி' வெளியாகிறது.

18வது பதிப்பாக இலங்கையில் 'தினத்தந்தி' தன்னுடைய தடத்தை இன்று பதிக்கிறது. இதையொட்டி 'தினத்தந்தி'க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி நல்ல நாளேடுதான். ஆனால் ஆளும் அரசுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதுதான் அதன் இயல்பாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. 

இலங்கையின் பாரம்பரியத் தமிழ்க்குடிகள் தங்கள் கனவான தனித்தமிழீழத்தை முற்றாகத் துறந்து, இந்தியத்தனமான தமிழர்களாக மாறுவதற்கு தினத்தந்தி நல்லதொரு தளமாக அமையும் என்று உறுதியாக நம்பலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,043. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.