Show all

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது.

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது ஸ்டார் இந்தியாவின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்தார். பின்னர் அவரின் உடலை ககோடே கிராமத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார். இந்த வழக்கில் இந்திராணி கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது முன்னாள் கணவர் கன்னா, முன்னாள் டிரைவர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷீனா கொலை செய்யப்பட்டபோது ரைகாட் போலீசார் சம்பவ இடத்தில் இருந்து பிங்க் நிற உடை, உடைந்த பல் மற்றும் வலது தோள்பட்டையில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பு ஆகியவற்றை ஒரு பாக்கெட்டில் போட்டு கலினாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு 2012ம் ஆண்டில் அனுப்பி வைத்தனர். அந்த மரபணு மாதிரிகள் ஷீனாவுடையது என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்த உடை, பல், எலும்பு ஆகிய மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.