Show all

கார்டூன் படம் பார்த்து பால்கனியின் விளிம்பில் ஏறி குதித்து இறந்தது குழந்தை

ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒசாகா நகரில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது ஒரு குடும்பம்.

 

சம்பவத்தன்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி குழந்தைகளுக்கான கார்டூன் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில் வரும் சம்பவத்தை போல் அச்சிறுமி தங்களது வீட்டின் பால்கனியின் விளிம்பில் ஏறி நின்று கொண்டு பின்னர் கீழே குதித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுமி பால்கனியின் மீது ஏறி நின்று விளிம்பு பகுதிக்குச் செல்வதை குடும்பத்தினர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் விரைந்து வந்து சிறுமியை காப்பாற்றும் முன்னர், கால் தவறி சிறுமி கீழே விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தினரிடம் முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளனர். குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி குதித்து உயிரிழந்துள்ள சம்பவத்தில் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

 

சம்பவத்தில் தொடர்புடைய அந்த கார்டூன் படத்தின் பெயரை வெளியிட மறுத்துள்ள விசாரணை அதிகாரிகள், அது மேலும் பல சிக்கலை உருவாக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.