Show all

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டார்

     கடந்த 1914-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 376 பேர் ‘கோமகதா மரு’ என்ற கப்பலில் அகதிகளாக கனடா வந்தனர். அவர்கள் 340 பேர் சீக்கியர்கள், 24 பேர் முஸ்லிம்கள், 12 பேர் இந்துக்கள். அவர்களில் 24 பேரை மட்டுமே அப்போதைய கனடா அரசு ஏற்றுக் கொண்டு குடியுரிமை வழங்கியது.

 

352 பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. அக்கப்பல் கொல்கத்தா திரும்பியதும் அப்போது ஆட்சி செய்த ஆங்கிலேய ராணுவம் 19 சீக்கிய அகதிகளைச் சுட்டுக் கொன்றனர். மீதமிருந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை மையமாக வைத்து இந்திய-கனடா கூட்டு முயற்சியில் சினிமா படம் தயாரிக்கப்பட்டது.

 

இச்சம்பவம் நடந்து 102 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டார். ஒட்டாவா நகரில் உள்ள குருத்வாராவில் நடந்த பைசாகி விழாவில் அவர் கலந்து கொண்டார்.

 

அப்போது அவர் பேசும் போது, ‘இன்று கனடாவை தேடி லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வருகிறார்கள். அவர்களுக்கு தஞ்சம் அளித்து குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 1914-ம் ஆண்டு கனடாவுக்கு ‘கோமகதா மரு’ கப்பலில் வந்த அகதிகள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதால் 19 சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

அதற்கு காரணம் அப்போது கனடாவில் இருந்த வெளிநாட்டினர் குடியிருப்பு சட்டம்தான் காரணம். அச்சம்பவத்துக்காக சீக்கிய சமுதாயத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது கனடா வரலாற்றில் சீக்கியர்களுக்கு நடந்த மிக துயரமான சம்பவமாகும்’ என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.