Show all

விழிமூடினார்! ஆனலும் அவரின் கனவுச்சாதனை நிகழ்த்தி முடிக்கப் பட்டது. சாதனை: உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல்பயணம்

அமெரிக்காவில் வெற்றிகரமாக புதிய சாதனையை நிகழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தை 44 ஆண்டுகளுக்கு முன்பு பில் கேட்ஸ் உடன் இணைந்து கூட்டாக தொடங்கியவர் பால் ஆல்லென். உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்க தீர்மானித்தார் ஆல்லென்.
இதற்காக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு  'ஸ்டிராட்டோலான்ச்' என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார். விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக நோற்று காலை 6.58 மணியளவில் பறக்க விடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.
அதன்படி, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே விமானம் மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து இந்தப் பெரிய விமானம் புறப்பட்டு சென்றது.
மோஜாவே பாலைவனப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக பறந்த பிறகு புறப்பட்ட இடத்தில் பத்திரமாக தரையிறங்கி புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.
இரட்டை விமானத்தைப் போன்ற உடலமைப்புடன் 385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானம் சுமார் 50 லட்சம் பவுண்டு எடை கொண்டதாகும். இதை நிறுத்தி வைக்க ஒரு பெரிய கால்பந்து திடல் அளவிலான இடம் தேவை.
ஆனால், இந்த வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் பால் ஜி ஆல்லென் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது 65-வது அகவையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,122.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.