Show all

புகையிலைப் பொருட்களை அனுப்ப அனுமதி பெற்றிருக்கிறதாம் இந்தியா! சீனாவின் இறக்குமதியை ஈடுசெய்ய சீனாவிடம்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் விற்கப்படும் மூன்றில் ஒரு பங்கு சிகரெட்டுகள் சீனர்களால் ஊதப்படுவதாக உலக சுகாராத அமைப்பு சொல்கிறது. சீனாவில் இந்த ஆண்டு கணக்கீடுகளின் படி சுமாராக 30 கோடி பேர் சிகரெட் புகைக்கிறார்களாம். உலகில் அதிகம் சிகரெட் புகைப்பவர்கள் சீனர்கள், அதிக சிகரெட் விற்கப்படும் இடமும் சீனாவே. ஒரு ஆண்டுக்கு சுமாராக 2.3 லட்சம் கோடி சிகரெட்டுகளை வாங்கி ஊதுகிறார்களாம்.   

உலக தரத்தில் புகையிலைப் பொருட்களை மூலப் பொருட்களாக அனுப்புவதாகட்டும், பதப்படுத்தப்பட்ட புகையிலையாகட்டும், சிகரெட்டுகளாக சுருட்டப்பட்டதாகட்டும் எல்லாவற்றிலும் இந்தியாவுக்கு தனி இடம் உண்டு. அதோடு சர்வதேச அளவில் ஒப்பிடும் போது குறைந்த விலைக்கே கிடைப்பது தான் இந்தியாவுக்கான இடத்தை எப்போதும் உறுதி செய்கிறது. 

இந்தியப் புகையிலைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வணிகத் துறை செயலர் அனுமதி வாங்கி இருக்கிறார். சீனாவுக்கும் இதனால் ஒருசில பில்லியன் டாலர்கள் மிச்சப்படுமாம். 

புகையிலைகளை மூலப் பொருட்களாகவும், பதப்படுத்தப்பட்ட நிலையிலும், முழுவதுமாமாக தயாரிக்கப்பட்ட சிகரெட் மற்றும் சுருட்டு என அனைத்து விதங்களிலும் இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்தியப் புகையிலை வணிகம் கடந்த நிதி ஆண்டில் 934 பில்லியன் டாலர் ஆகும்.  

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் புகையிலைப் பொருட்களில் பெரும்பாலானவைகள் பெல்ஜியம் மற்றும் ஒருங்கிணைந்த அரபு அமீரகத்துக்குத் தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறதாம். மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ஒரு சில விழுக்காடு ஏற்றுமதி செய்யபப்ட்டிருக்கிறதாம். 

நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருக்கும் தொகையை விட 63 பில்லியன் டாலர் கூடுதலாக நாம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதை அடைக்கும் முகமாக, சீனாவுக்கு இந்தியா புகையிலைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வாங்கி இருக்கிறதாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,047.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.