Show all

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக பொன்.ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சர்வதேச ஓகம் நாளையொட்டி, சுவாமி விவேகானந்தர் சேவா கேந்திரம் சார்பில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஓகம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா உலகுக்கு வழங்கியுள்ள மிக முக்கியமான கொடைகளில் ஓகமும் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தலின்பேரில், ஜூன் மாதம் 21-ஆம் தேதியை உலக ஓகம் நாளாக ஐ.நா.அவை அறிவித்தது.

இந்நாளில், நாட்டு மக்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

இந்திரா காந்தி பிரதமாராக இருந்தபோது, கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்தது. அப்போது, கூட்டணியில் இருந்த திமுக எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்தது.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த திமுக பதவிகளுக்காக மட்டுமே பிரச்னை செய்தது. ஆனால்,  கச்சத்தீவுக்காக எவ்விதப் பிரச்னையையும் செய்யவில்லை.

இந்த விவகாரத்தில் இருகட்சிகளுமே இரட்டை வேடம் போடுகின்றன.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.