Show all

அமெரிக்க உதவியின்றி சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோ சிப்ஸ்’களை வைத்து சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.

சீனா அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்தில் உலகிலேயே அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது. அதுவும் அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோ சிப்ஸ்’களை வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கு ‘தி சன்வே தாய்ஹு லைட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அதிவேக கணிணியை விட இது 2 மடங்கு கூடுதல் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது.

இதற்கு முன் தயாரிக்கப்பட்ட கணினி அமெரிக்காவின் ‘இன்டெல்’ நிறுவனத்தின் ‘சிப்ஸ்’களால் உருவானது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ‘தி சன்வே தாய்ஹு லைட்’ அதிவேக சிறப்பு கணினி ‘கிளைமேட் மாடெலிங் அன்டு லைப் சயின்ஸ்’ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தபட உள்ளது. தற்போது இது தென் சீனாவின் வுஸி நகரில் உள்ள தேசிய சிறப்பு கணினி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. 167 கணினிகளை உருவாக்கி உலக நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 165 கணினிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

பட்டியலில் இந்தியா 8-வது இடத்தை பிடித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.