Show all

5118வது தமிழ்ப் புத்தாண்டு! அரசியல் தலைவர்கள் வாழ்த்து

5118வது தமிழ்ப் புத்தாண்டு இன்றே மாலை 7-48 மணியளவில், பழந்தமிழ்க்; கணியர்கள் கணித்தவாறு பிறந்து விட்டது.

இதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா:

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், ஊக்கத்தோடு உழைப்போம், என புத்தாண்டில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டில், தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் எனவும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ஆளுநர் ரோசய்யா:

இந்த நன்நாளில் வருங்காலச் சந்ததினர் பயன்பெறும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்று  உறுதி ஏற்கவேண்டும்.

ராமதாஸ் (நிறுவனர் பாமக):

கடந்த ஆண்டில் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பெய்த மழை மற்றும் வௌ;ளத்தால்  அங்குள்ள மக்கள் பெரும் துன்பத்தையும், பொருள் இழப்பையும் சந்தித்தனர். அந்த பாதிப்பிலிருந்து பொருளாதார ரீதியிலும், மனதளவிலும் இன்று  வரை அவர்களால் மீள முடியவில்லை. இந்த சோகங்களுக்கு எல்லாம் முடிவு கட்டப்படும் நாள் நெருங்கி விட்டது. சித்திரை என்பது வசந்தத்துடன்  தொடர்புடைய விழா என்பதால் இந்த நாளில் தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை  சேரும் என்று நம்பலாம்.

பொன்.ராதாகிருஷ்ணன் (நடுவண் அமைச்சர், பாஜ):

இந்தியாவில் தமிழகம் முதல் நிலை மாநிலமாக மாறிட  புத்தாண்டு வழி காட்டட்டும். புத்தாண்டில் தமிழ், தமிழன், தமிழகம் உலகில் முதல்  நிலை பெற்றிட உறுதி ஏற்று பணிபுரிவோம்.

தமிழிசை சவுந்தரராஜன்(தமிழக பாஜ தலைவர்):  உலகமெங்கும் தமிழர்களால் தமிழ்ப்புத்தாண்டு குதூகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திற்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் பெருமையையும்  கொண்டு வரும் புத்தாண்டாக மலர்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் தாமரை மலர்ந்து மணம் வீசும் புத்தாண்டாக அமையவுள்ளது. தமிழ் புத்தாண்டில்  தமிழர்கள் பசியாறி, மகிழ்ச்சியுடன் தொழில் தொடங்கி, செல்வச் செழிப்போடு வாழவகை செய்யும் வழி பிறக்கவுள்ளது.

ஜி.கே.வாசன் (தலைவர்-த.மா.கா):

கடந்த ஆண்டு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பெய்த கடும் மழை, அதனால் ஏற்பட்ட வௌ;ளம், பிற பகுதிகளில்  நிலவிய வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகள், பொது மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். இதனால் மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும்  உள்ளானார்கள். எதிர்வரும் புத்தாண்டை மக்கள் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள், நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

என்.ஆர்.தனபாலன்  (தலைவர் - பெருந்தலைவர் மக்கள் கட்சி): ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து கல்வி, பொருளாதாரம் பெற்று தன்மானம், தன்னிறைவு,  தன்னம்பிக்கையுடன் வாழ முடியட்டும் விடியட்டும் என்ற பொருளோடு இந்த ஆண்டு முடிந்து புது புத்தாண்டில் தமிழக மக்களின் வாழ்வில் ஒளி  வீசிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எச்.வசந்தகுமார் (தமிழக காங். துணைத்தலைவர்):

ஒட்டுமொத்த தமிழகத்தைச் சீரழித்த மது அரக்கனை விரட்டிட தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்  ஓரணியில் திரண்டு புத்தாண்டில் மதுவில்லா தமிழகம் அமையும் என்று மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்போம். எதிர்வரும் சட்டமன்ற  தேர்தலில் தமிழகம் வளர்ச்சிப்பெற்றிட சோனியா காந்தி, ராகுல் காந்தி வழிகாட்டுதலோடு தமிழகத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் நல்லாட்சி அமைந்திட  சித்திரைப் புத்தாண்டு திருநாளில் சபதமேற்போம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன்:

மலரும் புத்தாண்டில், எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்ற நிலையை அடைய, அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். தமிழக மக்கள் உயர்ந்த நிலையை அடைய கற்றறிந்த மேதைகள், சீர்திருத்தச் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஊடகங்களின் பிரதிநிதிகள் வழிகாட்ட வேண்டும் எனவும் வாசன் கேட்டு கொண்டுள்ளார்.

 

இதேபோல் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் ஆர்.சரத்குமார், இந்திய  ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கோகுல மக்கள் கட்சி நிறுவனர் எம்.வி.சேகர், சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன்  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.