Show all

கனடா தலைமை அமைச்சரைத் தெரியாத தமிழர் இருக்கமாட்டார்கள்! அச்சு அசலில் அவரைப்போலவே ஆப்கனின் ஒருவர்

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத் தமிழர்களை விசிறிகளாகக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் ஒருவர் ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடக்கும் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொள்ளும்போது கண்டறியப்பட்டார்.

தென் கிழக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் மப்தூன். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவமைப்பு கொண்டிருப்பதால் தற்போது புகழ் வெளிச்சம் பெற்றுள்ளார்.

ஆப்கன் மின்மினி என்றொரு பிரபல பாடகர் போட்டி நிகழ்ச்சியில் 29 அகவை அப்துல் சலாம் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியின் நடுவர் ஒருவர் அப்துல் சலாமுக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையிலான உருவ ஒற்றுமையை கண்டறிந்த பின்னர் தற்போது இறுதிச் சுற்றில் உள்ள எட்டு போட்டியாளர்களில் ஒருவராகியுள்ளார் அப்துல்.

நான் சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பார்ப்பதற்கு முன்னதாக எனக்கு ஜஸ்டின் ட்ரூடோவைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கும் அவருக்கும் இடையிலான உருவ ஒற்றுமை காரணமாக தொலைக்காட்சி போட்டியில் வெல்வதற்கு எனக்கு 50விழுக்காடு கூடுதல் வாய்ப்பு உருவாகியுள்ளது என திருமண பாடகரான அப்துல் தெரிவித்துள்ளார்.

நடுவர் உருவ ஒற்றுமை குறித்து நிகழ்ச்சியில் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதும் மப்தூன் அங்கே ஒரு பிரபலமாக மாறிவிட்டார்.

ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பு கொண்டிருப்பதால் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோற்றாலும் வென்றாலும், திருமணத்தில் பாடும் தனது தொழிலில் இப்புகழ் மூலம் ஏற்றம் உண்டாகும் என தெரிந்துவைத்திருக்கிறார் அப்துல் மப்துன்.

தற்போது தன்னை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் கனடிய தலைமைஅமைச்சரைப் பார்க்க விரும்புகிறார். 

ஏனெனில் அவர் உலக பிரபலம், நான் ஆப்கானிஸ்தானின் தொலைதூர பகுதியில் உள்ள சாதாரண ஏழை என்று தெரிவித்துள்ளார் அப்துல் சலாம் மப்துன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,034.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.