Show all

தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்.

இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 12.30 மணியளவில் இளையதலைமுறை கட்சி, மறுமலர்ச்சி மாணவர் மன்றம், மறுமலர்ச்சி நாம் தமிழர் இயக்கம், பாலச்சந்தர் மாணவர் அமைப்பு, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு, பிரபாகரன் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் “இலங்கையில் உள்நாட்டு விசாரணையை அமெரிக்கா முன்மொழியக்கூடாது” என்ற தங்களின் கோரிக்கை அடங்கிய மனுவை சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரிடம் அளிக்க சென்றுள்ளனர்.

ஆனால் அமெரிக்கத் தூதரக காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் மனுவை அவர்களே பெற்றுக்கொண்டு மாணவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் கோபமடைந்த மாணவர்கள் மனுவை பெற்றுக்கொண்டதற்கான ரசீதோ அல்லது மனுவின் நகலில் முத்திரையோ எதுவும் இல்லாமல் மனுவை காவலர்களே பெற்றுக்கொண்டால் என்ன நியாயம் என்று தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர;. செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள்

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்த பின்லேடனை ஒரு நாட்டிற்குள்ளேயே அத்துமீறி நுழைந்து அவனையும் அவனது கும்பலையும் கொன்று குவித்தது அமெரிக்கா, இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஆதரிப்பது போல அமெரிக்கா அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. உடனே அமெரிக்க இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.