Show all

செயலிகள் தரவிறக்கத்தில் இந்தியர்களே முன்னிலை! நன்மை, தீமைகள் ஓர் ஆய்வு

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மிடுக்குப்பேசி வைத்திருப்போர் தங்களது பேசியில் குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சம் 207 செயலிகளைத் தரவிறக்கம் செய்கின்றனர். எனினும், சராசரியாக பெரும்பாலானோர் தங்களது மிடுக்குப்பேசியில் 51 செயலிகளைத் தரவிறக்கம் செய்கின்றனர்.

அண்மையில் வெளியான ஆய்வு அறிக்கையின் படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மிடுக்குப்பேசி பயனர்கள் தங்களது பேசியில் சராசரியாக 51 செயலிகளை தரவிறக்கம் செய்திருந்தாலும் அவை அனைத்தையும் அவர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான டெக்ஆர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி மிடுக்குப்பேசி பயன்படுத்துவோர் குறைந்தபட்சம் 24 செயலிகளையே பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடுக்குப்பேசியில் செயலிகளை தரவிறக்கம் செய்வோர் அவற்றை பற்றி அதிகம் யோசிக்கவும், புரிந்துகொள்வதும் இல்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மிடுக்குப்பேசியில் அதிகளவு செயலிகளை தரவிறக்கம் செய்வதால், மிடுக்குப்பேசி இயக்கம் எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சில சமயங்களில் பேசியில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளில் போலிகள் இருப்பின் அவை பயன்படுத்துவோரின் விவரங்களை அம்பலப்படுத்தலாம்.

70 விழுக்காட்டுப் பயனர்கள் சமூக வலைதள செயலிகளைத் தரவிறக்கம் செய்திருக்கின்றனர். பெரும்பாலானோர் வணிகம் சார்ந்த செயலிகளான வங்கி, செயலிகள், பணச் செயலிகள் உள்ளிட்டவற்றை தரவிறக்கம் செய்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.