Show all

ஐபோன் 5எஸ்-ன் விலையை சுமார் 50 சதவீதம்வரை குறைத்துள்ளது ஆப்பிள்

பிரம்மாண்ட விளம்பரங்களுடன் அறிமுகமாகி உலகையே பரபரப்புக்குள்ளாக்கும் 5எஸ் ஐ போனின்; விலையை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான் 5எஸ் மாடல் ஐபோன் விலை, 44,500 ஆக இருந்தது.

இதற்இடையில், ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதால் ஐபோன் 5எஸ்-ன் விற்பனை கடும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், இந்தியாவில் ஐபோன் விற்பனையில் 50 சதவீதத்தை தன்வசம் வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், தசராவின்போது ஒருமுறை, தீபாவளியின்போது மறுமுறை தற்போது மூன்றாவதுமுறை என ஐபோன் 5எஸ்-ன் விலையை சுமார் 50 சதவீதம்வரை குறைக்க நேர்ந்துள்ளது.

இதனால், தற்போது ஐ போன் விற்பனை விலை 24,999 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த டிசம்பருடன் முடியும் ஆண்டின் நிதிஇறுதி காலாண்டில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்த அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளதாக ஐபோன் விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.