Show all

அனைவரும் செத்துப்போய் விட்டார்கள்- தேடலை முடித்து வைத்தார் இலங்கை அதிபர்! இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள்

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக, ஐநா அதிகாரி ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தேடலை முடித்து வைக்கும், அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், ஒரு லட்சம் பேர் பலியானதாக கருதப்படுகிறது. சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

 அப்போது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்சே, போரில் முதன்மைப் பங்கு வகித்தார். தமிழர்கள் கொல்லப்பட்டதிலும், காணாமல் போனதிலும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

ஐ.நா. உயர் அதிகாரி ஹனாஸ் சிங்கர், இலங்கைக்கு வந்துள்ளார். அவர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார். இருவரும் இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் நிலவச் செய்வது குறித்து உரையாடல் நடத்தினர்.

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர், தேடலை முடித்து வைக்கும் விதமான தகவலை தெரிவித்தார். 

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டனர். ஆனால், காணாமல் போனவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்பது தெரியாததால், ‘காணாமல் போனார்கள்’ என்றே குடும்பத்தினர் கூறி வருகிறார்கள். தேவையான விசாரணை முடிந்த பிறகு, காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு கோத்தபய ராஜபக்சே கூறியதாக, அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.