Show all

சாதனைப் பெண் சுமன்குமாரி! பாகிஸ்தானின் முதலாவது பெண் அறங்கூற்றுவர் ஆகிறார்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காம்பார்-சாக்தாத்கோட்டை சேர்ந்த சுமன் குமாரி பெண் அறங்கூற்றுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அவருடைய சொந்த மாவட்டத்திலே பணியாற்றவுள்ளார். பாகிஸ்தானின் ஐதராபாத்தில் இளவல் சட்டப் படிப்பை முடித்துள்ளார். பின்னர் தன்னுடைய முதுவர் சட்ட மேற்படிப்பை கராச்சியில் உள்ள சுசாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். 

சுமன் குமாரியின் தந்தை  பவன்குமார் பேசுகையில், என்னுடைய மகள் பாகிஸ்தானில் உள்ள ஏழை மக்களுக்கு சட்ட உதவிகளைச் செய்வார். அவர், மிகவும் சவாலான தொழிலை தன்னுடைய கையில் எடுத்துள்ளார். அதில் கடினமான உழைப்பு மற்றும் நேர்மையினால் மேலும், மேலும் உயர்வார் என்றார். 

சுமன் குமாரின் தந்தை பாகிஸ்தானில் கண் மருத்துவராக  பணியாற்றி வருகிறார். அவருடைய மூத்த சகோதரி மென்பொருள் பொறிஞராகவும், இளைய சகோதரி பட்டய கணக்காளராகவும் பணியாற்றி வருகிறார்கள். 

பாகிஸ்தானில் பெண் ஒருவர் அறங்கூற்றுவர் ஆவது இதுவே முதன்முறையாகும், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து  பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,047.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.