Show all

ஒப்புக்கொண்டுள்ளது ஈரான்! தொழில்நுட்ப கோளாறால் தாக்குதல் நடந்ததாக; 176 பேர் உயிரிழந்த விமானத்தின் மீது.

176 பேர் பயணித்த உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டுவீழ்த்தியது நாங்களே என்று ஈரான் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறால் தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் தலைநகர் டெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த புதன் கிழமை புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிஸ் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள்.

ஈரானியர்கள் 82 பேரும், கனடாவை சேர்ந்த 63 பேரும், உக்ரைனை சேர்ந்த 11 பேரும், சுவீடனை சேர்ந்த 10 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேரும், ஜெர்மனி, இங்கிலாந்தை சேர்ந்த தலா 3 பேரும் உயிரிழந்தனர். இதில் 15 சிறுவர்கள் அடங்குவர்.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதட்டம் நிலவி வரும் சூழ்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற சந்தேகம் எழுந்தது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஈரான் மீது ஐயம் எழுப்பியிருந்தன.

இந்த நிலையில், விமானத்தை ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மனித தவறு காரணமாக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,394.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.