Show all

வாட்ஸ் அப் உபயோகிக்கும் பயனர்களின் எண்ணிக்கை 90 கோடி.

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் உபயோகிக்கும் பயனர்களின் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந்துள்ளதாக வாட்ஸ் அப் இணை நிறுவனர் ஜான் கோம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னனி மெசெஜிங் செயலியான வாட்ஸ் அப், அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடி வரை உயர்ந்து, தற்போது 90 கோடியாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு, முகநூல்; நிறுவனம் வாட்ஸ் அப்பை  கைப்பற்றியதை தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.

வாட்ஸ் அப்  இணை நிறுவனர் தனது முகநூல் பதிவில் மார்க் ஜுக்கர்பெர்க்கையும் டேக் (வுயப) செய்துள்ளார். வாட்ஸ் அப்  இந்த புதிய மைல்கல்லை அடைந்ததை வாழ்த்தி முகநூல் நிறுவனர்  மார்க் ஜுக்கர்பெர்க், முகநூல் உயர் அதிகாரி ஷெரில் உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.