Show all

அதிபர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அமெரிக

அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின், ப்யுர்டொ ரிக்கோவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசுக்கட்சி வேட்பாளர் மார்கோ ருபியோ உள்ளிட்டோர் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக குற்றஞ்சாட்டிக்கொண்டனர்.

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள, ப்யுர்டொ ரிக்கோவின் சான் ஜூவான் நகருக்கு சென்ற ஹிலாரி கிளிண்டன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க அதிபரானால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஆவணம் செய்யப்படும் என்றார்.

பிரச்சாரத்தில், ஹிலாரி கிளிண்டன் பேசியதாவது, “ப்யுர்டெ ரிக்கோவில், வசித்து வரும் மக்களுக்கு சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளனர். அவர்களுக்கு ஏற்றத்தாழ்வு இல்லாமல் சரிசமமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடியரசு கட்சி வேட்பாளர் மார்கோ ருபியோ, ஹிலாரி கிளிண்டன் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வாக்கு சேகரித்தார். ஹிலாரி கிளிண்டன், தமது ஈ மெயில் கணக்கை அரசு விஷயங்களுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக முன்கூட்டியே வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.