Show all

இந்தியாவிலும் ஒரு விளையாட்டு வீரர் தலைமை அமைச்சராக வேண்டும்! நவ்ஜோத் சிங் சித்து தகுதியானவர்: பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்தார்பூர்-குருதாஸ்பூர் வழித்தடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

சீக்கிய யாத்திரிகர்கள் நுழைவிசைவு இல்லாமல் சுதந்திரமாக பாகிஸ்தான் சென்று வர இந்த வழித்தடம் பெரிதும் வழிவகுக்கும். 

அதன் அடிக்கல் நாட்டு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசும்போது, 'நவ்ஜோத் சிங் ஏன் அங்கு விமர்சிக்கப்படுகிறார் என்று தெரியவில்லை, அவர் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புபவர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நவ்ஜோத் சித்து தேர்தலில் போட்டியிடலாம், அவர் நிச்சயம் இங்கு வெல்வார். இந்திய தலைமைஅமைச்சராக நவ்ஜோத் சிங் ஆனாரென்றால் இருநாடுகளுக்கும் நிரந்தர நட்பு ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்' என்றார்.

நவ்ஜோத் சித்துவும் இம்ரானை வானளாவப் புகழ்ந்து பாராட்டினார். 

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பாகிஸ்தானை கடுமையாகச் சாடி இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை ஏற்காத நிலையில், இம்ரான் அழைப்பை ஏற்று சித்து அங்கு சென்றிருப்பதுவும், இந்தியப் பிரதமராக சித்து ஆகவேண்டுமென்ற இம்ரான் பேச்சும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,986.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.