Show all

வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் இலங்கை கடற்பகுதியில் விழும்: புதியவதந்

வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் பூமியின் மீது மோதி உலகம் அழியும் என்று புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகின்றன. சில புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் விழுந்து நொறுங்குகின்றன. இத்தகைய விண்கற்களால் பூமிக்கு ஆபத்து என அவ்வப்போது தகவல்கள் வருவது வாடிக்கை. அந்தவகையில் தற்போது அடுத்தமாதம் விண்வெளியில் இருந்து பறந்து வரும் மர்மபொருள் ஒன்று பூமியில் மோதப் போகிறது என்ற தகவல் இணையத்தில் பரபரப்பாக உலா வருகிறது.

இந்த மர்மப்பொருளானது வேற்றுகிரகத்தில் இருந்து அனுப்பப்பட்டது எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த மர்மப்பொருள் மோதுவதால் உலகம் அழிந்து விடும் என்றும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆராய்ந்து வரும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 7 அடி நீளமுள்ள அந்த மர்ம பொருளுக்கு,

டபிள்யூ.டி.1190.எப் என பெயரிடப்பட்டுள்ளது. அது வருகிற நவம்பர் 13-ந் தேதி பூமியில் வந்து மோதும் என்றும், இந்திய பெருங்கடலில் இலங்கை கடற்பகுதியில் விழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.