Show all

எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா இந்தஆண்டு 12இடங்கள் முன்னேறி உள்ளது.

எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா 130வது இடத்தை பிடித்து உள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா 12இடங்கள் முன்னேறி 130வது இடத்தைப் பிடித்து உள்ளது.

எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில் 12 இடங்கள் முன்னேறி உள்ளது என்பது மிகவும் அளப்பறிய சாதனையாகும், என்று உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணரும், மூத்த துணை தலைவருமான கவுஷிக் பாசு கூறி உள்ளார்.

பெரிய அளவிலான பொருளாதார நாடும், 12 இடங்கள் முன்வருவது என்பது மிகவும் அளப்பறிய சாதனையாகும்.

142-வது இடத்தில் இருந்து 130-வது இடத்திற்கு செல்வது என்பதை இந்தியா செய்து உள்ளது. மிகவும் நல்ல முன்னேற்றமாகும். இந்தியாவிற்கு ஒரு நல்ல சமிக்ஞை கொடுத்து உள்ளது.

‘வணிகம் செய்ய 2016’ என்ற ஆண்டுஇறுதிஅறிக்கை  உலக வங்கிவெளியிட்டு உள்ளது. இப்பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, டென் மார்க், தென் கொரியா, ஹாங்காங், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து உள்ளன.

சீனா 84 வது இடத்தைப் பிடித்து உள்ளது. பாகிஸ்தான் 138வது இடத்தை பிடித்து உள்ளது. பாகிஸ்தான் 10-இடங்கள் பின்னுக்கு வந்து உள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் சீனா 90வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது 6 இடங்கள் முன்னேறி 84வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா 140-வது இடத்தில் இருந்து 142 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது 12 இடங்கள் முன்னேறி 130வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்தஆண்டு முக்கிய சீர்திருத்தங்களை, (தொழில் தொடங்குவதில் எளிமை) அமலுக்கு கொண்டுவந்ததால் இந்தியா உலக தரவரிசையில் 130-வது இடத்தைப் பிடித்து உள்ளது என்று உலக வங்கி தெரிவித்து உள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளப்பறிய சாதனையாகவே கருதப்படுகிறது. இனிவரும் காலங்களிலும் இந்தியா தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முன்னேறும் எனவும் உலகவங்கி கணித்து உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.