Show all

ஊழியர்களைத் தண்டித்த ஹவாய் நிறுவனம்! ஊழியர்கள் ஆப்பிள் செல்பேசியைப் பயன்படுத்தி, ஹவாய் அதிகாரப்பூர்வ கீச்சுவில் புத்தாண்டு வாழ்த்து

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது போட்டி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் செல்பேசிகளைப் பயன்படுத்தியதால் தனது இரண்டு ஊழியர்களை சீன தொலை தொடர்பு நிறுவனமான ஹவாய் தண்டித்துள்ளது.

ஊழியர்கள் இருவரும் ஹவாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கீச்சுக் கணக்கில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகளைக் கீச்சுப் பதிவு செய்துள்ளனர். ஐசெல்பேசியில் இருந்து வெளியிடப்பட்டதை காட்டிக்கொடுக்கும் விதமாக அந்த வாழ்த்துச் செய்தியுடன் ஐ செல்பேசியில் இருந்து இந்தக் கீச்சு வெளியிடப்பட்டது என்று ஒரு தகவல் வந்துள்ளது.

இதனால் இவ்விரு ஊழியர்களும் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஹவாய் பதவி குறைப்பு செய்திருப்பதாகவும், அவர்களின் ஊதியத்தை குறைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் அதிகம் விற்பனையாகும் மிடுக்குப்பேசிகளில் சாம்சங் நிறுவனத்துக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் உள்ளது ஹவாய் நிறுவனம். கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசும் கூட இந்த வகையான நடவடிக்கையைப் பின்பற்றலாம். அரசுப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் ஆசிரியர்களைத் தண்டித்தால், அந்த ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளிகளைத் தரப் படுத்துவார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.