Show all

வெளங்கீடும்! ஆங்கில புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில், சரக்கு முழு அளவில் இருப்பு வைக்க வேண்டும் என உத்தரவாம்

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வய்க்கிழமை பிறக்க விருக்கிற ஆங்கில புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் சரக்கு முழு அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ 60 முதல் ரூ1000 வரையிலான மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக மதுவும், நடுத்தர மதுவும்தான் அதிகளவில் விற்பனை ஆகும். டாஸ்மாக் விற்பனை கடந்த மாதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் கார்த்திகை மாதம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை யொட்டி டாஸ்மாக் கடைகளில் மதுவகைகளை அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும். இதனால் சாதாரண ரகம், நடுத்தர ரகம், உயர் ரகம் மதுபானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, கிடங்குகளில் முழு அளவில் சரக்குகளை இருப்பு வைக்க டாஸ்மாக் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி கடந்த ஆண்டை விட விற்பனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதை பிரியர்கள் விரும்பும் மதுவை போதுமான அளவு முழுமையாக இருப்பு வைக்க வேண்டும். நாளைக்குள் அனைத்து கடைகளிலும் சரக்குகள் போதுமான அளவில் வைத்து கொள்ள வேண்டும் என்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,017.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.