Show all

நார்வே நாட்டின், ஆஸ்லே நகரின் துணை மேயருக்குப் போட்டியிட்ட தமிழ்ப் பெண் வெற்றி.

நார்வே நாட்டின், ஆஸ்லே நகரின் துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழ்ப் பெண் வெற்றி பெற்றார்.

வட ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தலைநகர் ஆஸ்லேவில் துணை மேயர் பதவிக்கு தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழ்பெண்ணான கம்சாயினி குணரத்னம்(வயது 27) வெற்றி பெற்று உள்ளார். இவர் இதற்கு முன்பு ஆஸ்லே மாநகரில் கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருந்து வந்தார்.

இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான இவர் தனது 3 வயதில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக தனது பெற்றோருடன் அகதியாக நார்வேயில் குடியேறினார். கடந்த 2011-ம் ஆண்டு நார்வேயில் நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் 72 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் உயிர் தப்பியவர்களில் கம்சாயினியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.